Saturday, February 5, 2011

நன்றிகள் பல

அனைவருக்கும் வணக்கம்.                                                                                           தினைத் துணை நன்றி செயினும், பனைத் துணையாகக்
கொள்வர்-பயன் தெரிவார்.என் கருத்துக்களை பகிர ஒரு பதிவுதளத்தை தொடங்க வேண்டும் என்பது என் விருப்பம்.தளம் தொடங்க சரியான கணிணி அறிவு நுட்பம் தெரியாததால் பல தமிழ் கணிணி தொழில் நுட்ப வலை பதிவுகளை படித்து தான் இந்த தளத்தை தொடங்குகிறேன்.பலருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.முதலில் எனக்கு கணிணியை பற்றி ஆர்வத்தையும் தமிழ் படிக்கும் ஆசையும் ஏற்படுத்திய இன்னும் வாசகர் மனதில் வாழும் எழுத்தாளர் திரு.சுஜாதா அவர்களை நினைத்துப்பார்க்கிறேன்.என் வாழ்கையில் ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் என்று நினைத்த மனிதர்களில் ஒருவர்.நான் கற்றுக்கொண்ட அனைத்துக்கும் அடிப்படை காரணம் அவர் தான்.அவர் என்றென்றும் வாசகர்கள் நினைவில் வாழ்கிறார். அவரதுஎழுத்தால்நான்அடைந்தமகிழ்ச்சிக்கு,பெற்றுக்கொண்ட,கற்றுக்கொண்ட,தெரிந்துக்கொண்ட,என்று இப்படி நிறைவான விஷயங்கள் நிறைய உள்ளது.எல்லாவற்றுக்கும் நன்றி என்று மட்டும் சொல்வது எப்படி என்று தெரியவில்லை.நன்றி எனபது வார்த்தையாக மட்டும் இங்கு இல்லை.அது ஒரு விவரித்து சொல்ல முடியாத உணர்ச்சியாக உள்ளது.

                                                                                                                                                                                                                                                                                                                       
திரு.வேலன் அவர்கள் கணிணி ஒன்றை வாங்க வேண்டும் என்கின்ற ஆவலை எனக்கு தூண்டியவர்.வேலன் அவர்களால் தான் கணிணியை எப்படி உபயோகப்படுத்தலாம் என்று அறிந்துக்கொண்டேன்.புதிது புதிதாய் மென் பொருள்களை அனைவரும் எளிதாய் புரிந்திக்கொள்ளும் படி எழுதுவது இவரது சிறப்பு.இவரது பதிவுகளால் பலர் பயன் பெற்று இருப்பார்கள்.ஆனால் யாராவது லாபம் சம்பாரித்து இருப்பார்களா என்று எனக்கு தெரியாது.நான் இவரால் இருபத்து ஐந்தாயிரம் ரூபாய்(25,000) ஒரு வாரத்தில் சம்பாதித்தேன்.(அது autocadல் செய்ய வேண்டிய plan வேலை நான் போடோ ஷாப்பில் செய்தேன்)இன்றும் பல வேலைகளுக்கு அவரது வலை தளத்தை தான் பார்க்கிறேன்.(பங்கு கேட்ப்பாரோ?)அவரது எழுத்தில் அவரது அன்பு தெரிகிறது.அவரது வாழ்க வழமுடன் எனும் வார்த்தை வெறும் வார்த்தையாக இல்லாமல் அதை ஆசீர்வாதமாகவே எழுதுகிறார் என நான் நினைக்கிறேன்.இவர் தமிழ் வலை உலகத்திற்க்கு கிடைத்த மிகச்சிறந்த ஒரு பதிவாளர்.இது வரை செய்தவற்றுக்கும் இனிமேல் செய்ய போவதற்க்கும் என்றும் நன்றி உடையவனாய் இருப்பேன்.நன்றி.
இணைய உலகத்தில் வேலன் என்கின்ற பெயர் அனைவரின் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்க்கும்.அலெக்ஸா ரேங்கில் முதல் இடம் பெற்றதற்க்கு வாழ்த்துக்கள்.
                                                                                                                                                                                                         திரு.சூர்யாகண்ணன் அவர்கள்,மிகச்சிறந்த தொழில்நுட்ப்ப பதிவாளர்.இவரின் பல பதிவுகளை படித்து தான் கணிணியில் உள்ள பல சந்தேகம்கள்,பிரச்சனைகள் தீர்த்துக்கொண்டேன்.இன்று என் கணிணி மட்டும் அல்லாமல் நண்பர்கள்,உறவினர்கள் என்று பலரின் கணிணி சம்பந்தமான சிறிய முதல் பெரிய பிரச்சனைகள் வரை சரி செய்து கொடுக்கிறேன். அதற்க்கு இவருக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் ஈடு செய்ய முடியாது.மலைக்கு கீழ் இருந்தாலும் மலை அளவுக்கு மேல் எழுதிவருகிறார்.இன்னும் அதிகம் பேர்  பலனடைய இன்னும் சிறப்பாய் எழுத வாழ்த்துக்கள். 

அலெக்ஸா ரேங்கில் இரண்டாம் இடம் பெற்றதற்க்கு வாழ்த்துக்கள்.விரைவில் முதல் இடம் பெறவும் வாழ்த்துக்கள்.நன்றி.                                                                                                 இவர்கள் மட்டும் அல்ல இன்னும் பலருக்கும் நன்றி சொல்ல வேண்டும்.முக்கியமாக திரு.ஜாக்கி சேகர் அவர்களுக்கு,ஒரு முறை அவரது பதிவுக்கு ஓட்டு போட தெரியாமல் மைனஸ் ஓட்டு போட்டு விட்டேன்.நல்ல மனிதர்.அதற்க்கும் எனக்கு நன்றி சொல்லி இருந்தார்.இன்னும் சொல்ல நிறைய உள்ளது பட்டியல் பெரியது என்பதால் இத்துடன் முடிக்கிறேன்.மற்றவர்களுக்கு மற்றொரு சந்தர்ப்பத்தில் நன்றி சொல்கிறேன்.இவர்கள் செய்த உதவிகள் பனை அளவு.நான் சொல்லும் நன்றி தினை அளவு.                                                                                                                

27 comments:

தமிழ்த்தோட்டம் said...

நான் எனது நன்றியை சமர்ப்பிக்கிறேன்

புலிக்குட்டி said...

தமிழ்த்தோட்டம் said...
நான் எனது நன்றியை சமர்ப்பிக்கிறேன்
February 5, 2011 9:30 PM// தாங்கள் வருகைக்கு நன்றி.

பொன் மாலை பொழுது said...
This comment has been removed by the author.
பொன் மாலை பொழுது said...

புலிக்குட்டி ஜமாச்சிட்டீங்க ! வாழ்த்துக்கள்!!
நம்ம மாப்ள வேலனும், நண்பர் சூர்யா கண்ணனும் தமிழ் வலை தளத்தில் முக்கியமான இரு முன்னணி பதிவர்கள்.அவர்களுக்கு நன்றியுடன் குறிப்பிட்டு சிறப்பித்தது பண்பு.
நல் வாழ்த்துக்கள். தொடரட்டும்.

பொன் மாலை பொழுது said...

யோவ் ...என்னய்யா ? profile பாத்தா ஒண்ணுமே இல்ல?
புலிக்குட்டி வெறும் பூனைக்குட்டிதானா??:))
தெறந்து வையுங்க மேன்!

புலிக்குட்டி said...

//கக்கு - மாணிக்கம் said...
புலிக்குட்டி ஜமாச்சிட்டீங்க ! வாழ்த்துக்கள்!!
நம்ம மாப்ள வேலனும், நண்பர் சூர்யா கண்ணனும் தமிழ் வலை தளத்தில் முக்கியமான இரு முன்னணி பதிவர்கள்.அவர்களுக்கு நன்றியுடன் குறிப்பிட்டு சிறப்பித்தது பண்பு.
நல் வாழ்த்துக்கள். தொடரட்டும்.
February 5, 2011 11:09 PM/// உங்கள் கருத்துக்கு மிக நன்றி.வேலன் அவர்களும்,சூர்யாகண்ணன் அவர்களும் இல்லை என்றால் இந்த பதிவு நான் எழுதி இருக்க முடியாது.பெற்ற பயனுக்கு நன்றியாவது சொல்லுகிறேன்.

புலிக்குட்டி said...

கக்கு - மாணிக்கம் said...
யோவ் ...என்னய்யா ? profile பாத்தா ஒண்ணுமே இல்ல?
புலிக்குட்டி வெறும் பூனைக்குட்டிதானா??:))
தெறந்து வையுங்க மேன்!
February 5, 2011 11:13 PM/// புலி பதுங்கி இருக்கு.(தெறந்து வைக்க மறந்துட்டேன்.)

சி.பி.செந்தில்குமார் said...

congrats to all

புலிக்குட்டி said...

சி.பி.செந்தில்குமார் said...
congrats to all
February 6, 2011 1:20 PM/// உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.

மதுரை சரவணன் said...

naalla nanri therivippu... vaalththukkal

புலிக்குட்டி said...

மதுரை சரவணன் said...
naalla nanri therivippu... vaalththukkal
February 6, 2011 2:53 PM // வாழ்துக்கும் வருகைக்கும் நன்றி நன்பரே.

வேலன். said...

வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி புலிக்குட்டி..

வாழ்க வளமுடன்.
வேலன்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பதிவுலகம் உங்களை வரவேற்க்கிறது...

www.sureshbabuvinitulaa.blogspot.com said...

உங்களது பணி தொடர வாழ்த்துகிறேன் .

குறையொன்றுமில்லை. said...

நல்ல பதிவு.

புலிக்குட்டி said...

வேலன். said...
வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி புலிக்குட்டி..

வாழ்க வளமுடன்.
வேலன்.
February 7, 2011 11:16 PM/////// தாங்கள் வருகையை ஆவலுடன் எதிர் பார்த்துக்கொண்டிருந்தேன்.வருகைக்கும் உங்கள் வாழ்த்துக்கும் என்றும் நன்றி.

புலிக்குட்டி said...

பட்டாபட்டி.... said...
பதிவுலகம் உங்களை வரவேற்க்கிறது...
February 8, 2011 8:19 AM//// வரவேற்ப்புக்கு நன்றி பட்டாப்ட்டி அவர்களே.

புலிக்குட்டி said...

www.sureshbabuvinitulaa.blogspot.com said...
உங்களது பணி தொடர வாழ்த்துகிறேன் .
February 8, 2011 8:35 AM//// வாழ்த்துக்கும் தாங்களின் வருகைக்கும் நன்றி நன்பரே.

புலிக்குட்டி said...

Lakshmi said...
நல்ல பதிவு.
February 8, 2011 11:45 AM //// தாங்களின் வருகைக்கு நன்றி அம்மா.(என் அம்மா பெயரும் Lakshmi தான்)

குறையொன்றுமில்லை. said...
This comment has been removed by the author.
குறையொன்றுமில்லை. said...

என்பயர்பாக்கும்போதெல்லாம் உங்க அம்மா நினைவு வருமா, உங்க அம்மாவைப்பார்க்கும்போது என் நினைவு வருமா?

புலிக்குட்டி said...

Lakshmi said...
என்பயர்பாக்கும்போதெல்லாம் உங்க அம்மா நினைவு வருமா, உங்க அம்மாவைப்பார்க்கும்போது என் நினைவு வருமா?
February 8, 2011 10:09 PM/////////////////////////இதை படித்த பின்பு இரண்டு வரும் என்று நினைக்கிறேன்.நன்றி.

THivya said...

Best Wishes...
Thankin from puthiyaulakam
http://puthiyaulakam.com

புலிக்குட்டி said...

puthiyaulakam said...
Best Wishes...
Thankin from puthiyaulakam
http://puthiyaulakam.com
February 9, 2011 2:15 AM///////////////////////thank you for your support

குறையொன்றுமில்லை. said...

புலிக்குட்டி, சரியான பதில் ஹா, ஹா,.

Arunvetrivel said...

unga nermai yenakku pudichirukku nanpa. vaazga vaazga valamudan.

புலிக்குட்டி said...

arunvetrivel said...
unga nermai yenakku pudichirukku nanpa. vaazga vaazga valamudan.
February 9, 2011 10:15 Pm/////////////////////////உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

Post a Comment

ஏதாவது சொல்லுங்க