Wednesday, February 9, 2011

தமிழகத்தின் எதிர்காலம் டாஸ்மாக்கில்

உங்களை யாரும் கடன்காரா என்றால் வருதப்படாதீர்கள்.                                                                              ஏன் எனில் நாம் ஏற்கனவே இந்தியா (மத்திய அரசு)வாங்கிய கடனுக்கு கடன்காரர்கள்.120 கோடி மக்கள் தொகை உள்ள இந்தியாவின் தற்பொழுது உள்ள கடன்34,6322கோடி.6.5கோடி மக்கள் தொகை உள்ள தமிழ் நாட்டின் தற்போதைய கடன் 1,01540 கோடி.கடன் அன்பை முறிக்கும்,எழும்பை முறிக்கும் என்றெல்லாம் கேட்டிருக்கிறோம்.தமிழ்நாட்டின் கடன் சுமை நம் கழுத்தை நெரிக்கும்.2006 மார்ச் மாதத்தில் 57,457 கோடியாக இருந்த தமிழக கடன் தொகை தற்போழுது இரு மடங்காக உயர்ந்துள்ளது.சட்ட விதிப்படி கடன் பெறும் மாநிலம் தன் உற்பத்தியில் 25 சதவீதம் அளவுக்கு கடன் பெறலாம்.தமிழக நிதித் துறை செயலாலரின் சொல் படி தமிழகத்தின் கடன் அளவு வரும் ஆண்டு 20.46% சதவீதமாக இருக்கும்.ஆனால் பல மாநிலங்கள் இதை விட அதிகமாய் 40% முதல் 60% சதவீதம் கடன் வாங்கியிருக்கிறார்களாம் தமிழகம் அதை விட குறைவாக வாங்கி இருக்கிறதாம்.(மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டு சொல்வதை விடவே மாட்டார்களா?பெட்ரோலியப் பொருள்களுக்கு அதிக வரி விதிப்பதில் தமிழகம் எத்தனையாவது இடம்?)இதற்கெல்லாம் காரணம் இலவச திட்டங்கள்,கடன் தள்ளுபடிகள் தான்.தமிழ்நாட்டை அடகு வைத்து கடன் வாங்கி ஏதோ இவர்கள் வீட்டு சொத்தில் குடுப்பது போல் விளம்பரம் செய்கிறார்கள்.கலைஞரின் ஒரு ரூபாய் அரிசி.கலைஞரின் இலவச காங்கிரிட் வீடு வழங்கும் திட்டம் என்று.

                                                                                                                                                                                                                                வீடு வழங்கும் திட்டம்;இது உண்மையில் மக்கள் மேல் உள்ள அக்கறையில் போட்ட திட்டமாக இல்லை.இதில் இருக்கிற கடன் போதாது என்று பொது மக்களையும் கடன்காரர்களாக மாற்ற போகிறார்கள்.இந்த திட்டத்தில் குடுக்கும் பணத்தில் வீடு கட்டுவதற்க்கு இந்த திட்டத்தை தயாரித்த நிபுனர் தான் வரைப்படம் வகுத்து கொடுக்க வேண்டும்.இல்லை என்றால் மேற்க்கொண்டு பணம் போடாமல் வீடு இல்லை கழிவறை கூட கட்ட முடியாது.இதில் இலவசமாய் கொடுத்த மாட்டை பல்லை பிடித்து பார்க்க கூடாதுனு ஒரு அமைச்சருக்கு சலிப்பு வேற.என்னமோ இவர்கள் கை காசில் தருவது போல் நினைப்பு.எங்களுக்கு தலைக்கு மேல வெள்ளம் போகுது(கடன்)உங்களுக்கு தரைக்கு மேல தங்கம் கொட்டுது,குடுக்கனும்னு முடிவெடுத்தாச்சு.ஒரு வீடு கட்டும் அளவுக்காவது சேர்த்து குடுத்து விட வேண்டியது தானே.இதில் 3 இலச்சம் பேருக்கு அட்வாஸ் புக்கிங் வேற.(எங்களுக்கு ஓட்டு போட்டால் தான் வீடு இல்லைனா ஒன்னும் கிடைக்காது ஓடு)மக்களை கட்டாயப்படுத்தி,மறைமுகமாக மிரட்டி அல்லது அடிமை படுத்தி அதிகாரத்திற்க்கு வர இவர்கள் போடும் ஒரு திட்டம் இது.எதிர் கட்சிகளும் இதைப்பற்றி பெரிதாக ஏதும் சொல்ல வில்லை.அவர்கள் அதை தவறு என்று மறுப்பு சொன்னால் ஆப்பு அவர்களுக்குதானே.3 இலச்சம் வீடுகள் என்றால் எத்தனை இலச்சம் ஓட்டு கணக்கு போட்டு பார்த்திருப்பார்கள்.                                                                                

அடுத்ததாக இலவச போன் வேறு குடுக்கிறார்களாம்.அடுத்தது பென்களுக்கு இலவசமாக சானிடரி நாப்கின் குடுக்க போகிறார்கள்.யார்கண்டா அடுத்ததாக திருமணமாணவர்களோ,ஆகாதவர்களோ மாதம் 2000 ரூபாய்க்குள் வருமானம் உள்ள (எல்லா திட்டங்களுக்கும் அப்படி தான் சொல்றாங்க 2000 ரூபாய்க்குள் வருமானம் இருந்தால் அவர் ஏழையாம்.2000 ரூபாய் அல்ல இப்பொழுது 10,000 ரூபாய் வருமானம் உள்ளவர்களே ஏழைகள் தான்.)குழந்தை இல்லாதவர்களுக்கு இலவசமாக குழந்தைகள் வழங்கப்படும்.அடுத்ததாக வருடத்திற்க்கு ஒரு முறை குடும்பத்துடன் இலவசமாக சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள்.(இது நல்ல யோசனை)இப்படியே போனால் தமிழ்நாட்டில் பிறந்தால் போதும்னு வாழ்ந்தால் போதும்னு மற்ற மாநிலத்தவர்கள் இங்கு வந்து விடுவார்கள்.                                                        

எல்லாம் இலவசமாக குடுக்கிறார்கள். என்ன காசுகுடுத்தலும் கரண்ட் குடுக்க முடியிலயே!.                                                                                                                                                    எது எப்படியோ இந்த வருடம் டாஸ்மாக் வருமானம் 14,152கோடி ரூபாய்.எப்படியும் தமிழ் நாட்டின் கடனை கட்டி விடலாம்.இனி மேல் டாஸ்மாக் செல்பவர்களுக்கு மரியாதை குடுங்கள்.அவர்களை நம்பிதான் நாடே இருக்கிறது.அவர்களுக்கு நாட்டுக்கு இவ்வளவு கடன் இருப்பது தெரிந்தால் அந்த கவலையிலேயே ஒரு கூவாட்டர் சேர்த்து குடிப்பார்கள்.கடனை சீக்கிரமாய் தீர்த்து விடலாம்.  (ஓவரா சரக்கு அடித்து இறந்தால் அரசு சார்பில் அவர்களுக்கு சமாதி கட்டப்படும்.குடும்பத்தாருக்கு தியாகிகளுக்கான உதவி தொகை கொடுக்கப்படும். இந்த அறிவிப்பு வரும் தேர்தலில் ஏதாவது ஒரு கட்சி அறிவிக்கும்.)அடுத்த கடன் வாங்கும் பொழுது இவர்களிடம் ஒரு வார்த்தை கேடபது நல்லது.     என்ன தவம் செய்தோம் தமிழர்களாய் தமிழ்நாட்டில் பிறக்க!.                                                                                           பின் குறிப்பு:தமிழகத்தின் மொத்த வருவாயில் 49% சதவீதம் அரசு ஊழியர்களுக்கு தான் செலவாகிறதாம்.மிச்சம் தான் மக்களுக்கு.                                                                                                                                 

Saturday, February 5, 2011

நன்றிகள் பல

அனைவருக்கும் வணக்கம்.                                                                                           தினைத் துணை நன்றி செயினும், பனைத் துணையாகக்
கொள்வர்-பயன் தெரிவார்.என் கருத்துக்களை பகிர ஒரு பதிவுதளத்தை தொடங்க வேண்டும் என்பது என் விருப்பம்.தளம் தொடங்க சரியான கணிணி அறிவு நுட்பம் தெரியாததால் பல தமிழ் கணிணி தொழில் நுட்ப வலை பதிவுகளை படித்து தான் இந்த தளத்தை தொடங்குகிறேன்.பலருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.முதலில் எனக்கு கணிணியை பற்றி ஆர்வத்தையும் தமிழ் படிக்கும் ஆசையும் ஏற்படுத்திய இன்னும் வாசகர் மனதில் வாழும் எழுத்தாளர் திரு.சுஜாதா அவர்களை நினைத்துப்பார்க்கிறேன்.என் வாழ்கையில் ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் என்று நினைத்த மனிதர்களில் ஒருவர்.நான் கற்றுக்கொண்ட அனைத்துக்கும் அடிப்படை காரணம் அவர் தான்.அவர் என்றென்றும் வாசகர்கள் நினைவில் வாழ்கிறார். அவரதுஎழுத்தால்நான்அடைந்தமகிழ்ச்சிக்கு,பெற்றுக்கொண்ட,கற்றுக்கொண்ட,தெரிந்துக்கொண்ட,என்று இப்படி நிறைவான விஷயங்கள் நிறைய உள்ளது.எல்லாவற்றுக்கும் நன்றி என்று மட்டும் சொல்வது எப்படி என்று தெரியவில்லை.நன்றி எனபது வார்த்தையாக மட்டும் இங்கு இல்லை.அது ஒரு விவரித்து சொல்ல முடியாத உணர்ச்சியாக உள்ளது.

                                                                                                                                                                                                                                                                                                                       
திரு.வேலன் அவர்கள் கணிணி ஒன்றை வாங்க வேண்டும் என்கின்ற ஆவலை எனக்கு தூண்டியவர்.வேலன் அவர்களால் தான் கணிணியை எப்படி உபயோகப்படுத்தலாம் என்று அறிந்துக்கொண்டேன்.புதிது புதிதாய் மென் பொருள்களை அனைவரும் எளிதாய் புரிந்திக்கொள்ளும் படி எழுதுவது இவரது சிறப்பு.இவரது பதிவுகளால் பலர் பயன் பெற்று இருப்பார்கள்.ஆனால் யாராவது லாபம் சம்பாரித்து இருப்பார்களா என்று எனக்கு தெரியாது.நான் இவரால் இருபத்து ஐந்தாயிரம் ரூபாய்(25,000) ஒரு வாரத்தில் சம்பாதித்தேன்.(அது autocadல் செய்ய வேண்டிய plan வேலை நான் போடோ ஷாப்பில் செய்தேன்)இன்றும் பல வேலைகளுக்கு அவரது வலை தளத்தை தான் பார்க்கிறேன்.(பங்கு கேட்ப்பாரோ?)அவரது எழுத்தில் அவரது அன்பு தெரிகிறது.அவரது வாழ்க வழமுடன் எனும் வார்த்தை வெறும் வார்த்தையாக இல்லாமல் அதை ஆசீர்வாதமாகவே எழுதுகிறார் என நான் நினைக்கிறேன்.இவர் தமிழ் வலை உலகத்திற்க்கு கிடைத்த மிகச்சிறந்த ஒரு பதிவாளர்.இது வரை செய்தவற்றுக்கும் இனிமேல் செய்ய போவதற்க்கும் என்றும் நன்றி உடையவனாய் இருப்பேன்.நன்றி.
இணைய உலகத்தில் வேலன் என்கின்ற பெயர் அனைவரின் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்க்கும்.அலெக்ஸா ரேங்கில் முதல் இடம் பெற்றதற்க்கு வாழ்த்துக்கள்.
                                                                                                                                                                                                         திரு.சூர்யாகண்ணன் அவர்கள்,மிகச்சிறந்த தொழில்நுட்ப்ப பதிவாளர்.இவரின் பல பதிவுகளை படித்து தான் கணிணியில் உள்ள பல சந்தேகம்கள்,பிரச்சனைகள் தீர்த்துக்கொண்டேன்.இன்று என் கணிணி மட்டும் அல்லாமல் நண்பர்கள்,உறவினர்கள் என்று பலரின் கணிணி சம்பந்தமான சிறிய முதல் பெரிய பிரச்சனைகள் வரை சரி செய்து கொடுக்கிறேன். அதற்க்கு இவருக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் ஈடு செய்ய முடியாது.மலைக்கு கீழ் இருந்தாலும் மலை அளவுக்கு மேல் எழுதிவருகிறார்.இன்னும் அதிகம் பேர்  பலனடைய இன்னும் சிறப்பாய் எழுத வாழ்த்துக்கள். 

அலெக்ஸா ரேங்கில் இரண்டாம் இடம் பெற்றதற்க்கு வாழ்த்துக்கள்.விரைவில் முதல் இடம் பெறவும் வாழ்த்துக்கள்.நன்றி.                                                                                                 இவர்கள் மட்டும் அல்ல இன்னும் பலருக்கும் நன்றி சொல்ல வேண்டும்.முக்கியமாக திரு.ஜாக்கி சேகர் அவர்களுக்கு,ஒரு முறை அவரது பதிவுக்கு ஓட்டு போட தெரியாமல் மைனஸ் ஓட்டு போட்டு விட்டேன்.நல்ல மனிதர்.அதற்க்கும் எனக்கு நன்றி சொல்லி இருந்தார்.இன்னும் சொல்ல நிறைய உள்ளது பட்டியல் பெரியது என்பதால் இத்துடன் முடிக்கிறேன்.மற்றவர்களுக்கு மற்றொரு சந்தர்ப்பத்தில் நன்றி சொல்கிறேன்.இவர்கள் செய்த உதவிகள் பனை அளவு.நான் சொல்லும் நன்றி தினை அளவு.